மயிலாடுதுறை ஆர்.ட்டி.ஓ. அலுவலகத்தில் அதிகாரிகள் பெயரில் போலி கையொப்பம்

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கண்காணிப்பாளர் கையொப்பத்தை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போட்டு மோசடி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜப்தி செய்யப்பட்ட டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகரஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் 39 வயதான மதன்மோகன். இவர் கடந்த 2019- ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் விவசாயக்கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். கொரோனா தொற்றுக்காலத்தில் தவணை முறையாக செலுத்த முடியாத நிலையில் 2021-ல் மதன்மோகனின் 2 டிராக்டர்களையும் ஜப்தி செய்ததோடு, அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி டிராக்டரை விற்பனை செய்து மோசடி செய்ததாக மதன்மோகன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Next Story