வருவாய் துறை சங்கங்களிறன்கூட்டமைப்பினர் போராட்டம்

வருவாய் துறை சங்கங்களிறன்கூட்டமைப்பினர் போராட்டம்
X
மயிலாடுதுறை மாவட்ட தலைநகரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பேரணி மற்றும் தர்ணா போராட்டம். பனி பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்:-
வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து பேரணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட தலைநகர் மயிலாடுதுறையில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு பேரணி தர்ணா போராட்டம் நடைபெற்றது. தருமபுரம் பகுதியில் துவங்கிய பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளித்திட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள்மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட சிறப்பு பணிபாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் , பணி பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு உச்சவரம்பு அஞ்சு சதவீதம் என குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவும், கிராம உதவியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடங்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 350 க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Next Story