ரயில் நிலைய கட்டுமான பணியில் கண்ணாடி சிதறி காயம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்பட்ட டிக்கெட் கவுண்டரில் 7 × 8 அளவு கண்ணாடி பொருத்தப்பட்டபோது, கண்ணாடி தவறி விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளர்கள் செல்லதுரை, பரத், ஈஸ்வர், தீபக் மற்றும் பிஹார் மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் லாகேஸ்வரதாஸ், குஷேஸ்வர் தாஸ், மகேஷ் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு கண்ணாடி கிழித்து கைகளில் லேசான காயம் ஏற்பட்டு, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பினார்.
Next Story







