காங்கிரஸ் கூட்டணி வைக்கும் கட்சி வெல்லும்

காங்கிரஸ் கூட்டணி வைக்கும் கட்சி வெல்லும்
X
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது தொடர் வெற்றி பெற்றுவருகிறது இந்தக்கூட்டணி ஒரு கொள்கை கூட்டணியாகும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு பேட்டி
அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு  முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர்  தங்கபாலு, தலைமையில் அழகிரி, அகில இந்திய பொறுப்பாளர் நித்தின்கும்பல்கர், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர்  பார்வையிட்டனர்.    தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள்       தற்போதைய நிலை   எவ்வாறு  உள்ளது.   காங். வளர்ச்சிக்காக வாடகைக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக முன்னெடுத்துள்ளோம். மயிலாடுதுறையில் ஒருசில நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது விரைவில் அது சரிசெய்யப்படும் என்றார்.          தமிழகத்தில்   சில நிகழ்ச்சிகளை வைத்து ஆட்சியை தவறாக சித்தரிக்க முடியாது. லாக்கப் டெத் விஷயத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தமிழக முதல்வர்; பதவி இறக்கம் செய்துள்ளார். எங்கு தவறு நடந்தாலும் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுக்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுத்துவருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி தலைமை மிகச்சிறப்பாக உள்ளது. கூட்டணி தலைவராக முதல்வர் செயல்படுகிறார். கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றுள்ளோம். இந்தியா கூட்டணி கொள்கைக்கான கூட்டணி. காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி தமிழகத்திலும் வெல்லும்.  இந்தியா கூட்டணி வெற்றிக்கூட்டணி நிச்சயம் வரும் தேர்தலிலும் வெற்றிபெறும் என்றார்.
Next Story