காந்தி சத்தியாகிரக போராட்டத்தின் முதல்தமிழர்
மயிலாடுதுறையை சேர்ந்த சாமிநாகப்பன் படையாட்சி தனது 18-வது வயதில் காந்தி நடத்திய முதல் சத்யகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்விட்டவர். மகாத்மா காந்தியுடன் போராட்ட களத்தில் நின்று முதல்பலியான தமிழரும் இவரே. தனது 18 வயதில் பஞ்சம் பிழைக்க சென்ற தேசத்திலும் காந்தியின் சுதந்திர போராட்ட சத்தியாகிரக களத்தில் இறங்கியவர் சாமிநாகப்பன் படையாட்சி இவரின் சேவையை, தியாகத்தை போற்றி தென்னாப்பிரிக்கா அவருக்கு சிலை வைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் இந்து திருமணத்தை செல்லாது என்றும் அதை பதிய வைக்க மறுத்தது தென்னாப்பிரிக்கா அரசு. இதை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்திமிகப்பெரிய கூட்டத்தை சாமிநாகபனின் தலைமையில் கூட்டினார். கைது செய்யப்பட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மன்னிப்பு கடிதம் எழுதி தந்தால் விடுதலை செய்யப்படுவாய் என்று தென்னாப்பிரிக்க அரசு கேட்டபோது காந்திஜியின் கட்டளைக்கு இணங்க மன்னிப்பு எழுதி தர முடியாது என்று சாமி நாகப்பன் மறுத்துவீட்டார், குத்துயிரும் கொலையுயிருமாக சாமி நாகப்பனை வெளியே அனுப்பியது வெள்ளையர் அரசு, வைத்தியம் பார்க்க நிலையில் 1906 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மரணம் அடைந்தார் அவரின் 116 ஆம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது. தமிழக அரசின் வன்னிய நல வாரிய இடத்தில் அமைக்கப்பட்ட சாமி நாகப்பன் உருவ சிலைக்கு வன்னிய நலவாரியத்தின் தாசில்தார் கோவிந்தராஜன் துணை மண்டல துணை வட்டாட்சியர் பாபு ஆகியோர் முன்னிலையில் மாவீரர் வன்னியர் சங்க நிறுவனர் வி ஜி கே மணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது முன்னாள் எம்எஎலஏ குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறைசட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஜெகமுருகன், அய்யப்பன், பாமக (ராமதாஸ்) மாவட்ட செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றதுடன் பொதுக்கூட்டத்தில் பல கட்சிகளின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்..அதன்பிறகு நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை எம்.பி. சுதா, பேராசிரியர் முரளிதரன், கழுகு பத்திரிகை ஆசிரியர் மதியழகன் மற்றும் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
Next Story







