பள்ளி வேன் மீது மோதிய ரயில் மயிலாடுதுறை வழியாக திருச்சிக்குப் பயணம்

விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை புறப்பட்ட ரயில் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் வந்த போது, மூடப்படாத ரயில்வே கேட் பகுதியை கடந்து வந்த பள்ளி வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விபத்தை ஏற்படுத்திய ரயிலை மயிலாடுதுறையில் இருந்து இரண்டு இன்ஜின்கள் செம்மங்குப்பம் சென்று, வழியில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலை மயிலாடுதுறை ரயில் நிலையம் கொண்டுவந்தனர்.. பள்ளி வாகனத்தில் மோதிய ரயிலின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. மேலும் ரயிலின் முகப்பு பகுதியில் நசுங்கி சேதமடைந்துள்ளது. இதை எடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள எஞ்சின் இங்கு சில சோதனைகளுக்கு பிறகு திருச்சி பொன்மலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story