மதுவிலக்கு டிஎஸ்பியின் அதிரடி

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கேட்டபோது கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டது மாவட்ட காவல்துறை, மீண்டும் பணிக்கு வந்து வாகனத்தை கேட்டது வாகனம் பழுது நீக்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாகனம் வந்த பிறகு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 1 கி.மீ. தூரம் உள்ள தமது அலுவலகத்திற்குகடந்த இரண்டு தினங்களாக இருசக்கர வாகனத்தில் சென்றவர், இன்று நடந்தே அலுவலகத்துக்கு சென்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மதுவிலக்கு டிஎஸ்பிக்கும் மோதல் தொடர்ந்து முற்றி வருகிறது.
Next Story

