திமுக குடும்பத்தினரை விமர்சித்த எடப்பாடியார்

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்தார். மயிலாடுதுறை சின்னகடைவீதியில் ரோடுஷோ மூலம் வாகனத்தில் நின்றவாறே மக்களை சந்தித்து பரப்புரை செய்து அவர் பேசுகையில்:- 50 மாத திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கொடுக்கவில்லை.  மக்கள் செல்வாக்கை இழந்த ஸ்டாலினுக்கு அடுத்த ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என பயம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என பொய்யான தகவலை முதலமைச்சர் பரப்பி வருகிறார். நாங்கள் புதிய மாவட்டத்தை கொண்டு வந்ததால் தான் நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இங்கே திறந்தீர்கள். தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் சென்று வந்துவிட்டேன். இதனால் தனது தொண்டை முழுவதும் புண்ணாகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. வீட்டு மக்களைப் பற்றிதான் கவலைப்படுகிறார். திறமையற்ற பொம்மை முதலமைச்சர் எனவும் விமர்சித்தார். ஸ்டாலின் அவர்களே சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. கீழே உள்ள சக்கரம் மேலே கண்டிப்பாக வரும். உங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல் அனைத்தையும் நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக காட்டுவோம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது. பத்து ரூபாய் பாலாஜி என பட்டப்பெயர் வந்துவிட்டது. ஒரு நாளைக்கு 15 கோடி டாஸ்மாக் கடையில் இருந்து வருகிறது. 5,400 கோடி வருடத்திற்கு வருகிறது.  பல்லாயிரக்கணக்கான கோடிபணத்தை கொள்ளை அடித்தது திமுக அரசாஙங்கம். சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என திணறுகின்றார்கள் என திமுக நிதியமைச்சர் தெரிவித்தார். முப்பதாயிரம் கோடி வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுவது வெளிநாட்டிற்கு தொழில் முதலீடு செய்வதற்காதக போனார். இப்படிபட்ட முதலமைச்சர் நாட்டிற்கு தேவையா? திமுக என்றாலே வாரிசு அரசியல். மன்னர் ஆட்சி இந்தியாவில் ஒழிக்கப்பட்டது. மீண்டும் மன்னர் ஆட்சி அமைப்பதற்கு ஸ்டாலின் துடிப்பதாக தெரிவித்தார். வருகின்ற  சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான நெருக்கடி தரப் போகிறார்கள். விசிக ஆட்சியில் பங்கு கேட்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன. தேர்தல் நெருங்கும்போது சில கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரும். ஜால்ரா போடுபவர்களுக்கே திமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சியல் நேர்மையாக அதிகாரிகளுக்கு மதிப்பில்லை. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை பிடுங்கி உள்ளனர். நேர்மையான அதிகாரிகளை கேவலப்படுத்தினால் நாட்டில் எப்படி அதிகாரிகள் மக்கள் பணியை  செய்வார்கள் என்ற கேள்வி எழுப்பினார். போதையின் பாதையில் செல்லாதீர்கள் என அனைத்தும் முடிந்த பிறகு முதல்வர் சொல்கிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல் பல்வேறு அதிகாரிகள் ஜால்ரா அடித்துக்கொண்டு உங்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகளை தலையில் தூக்கி கொண்டு ஆடுகிறீர்கள். முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு மூலம் திமுக கட்சியில் உறுப்பினர்களாக சேருங்கள் என வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கிறார். மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டு கதவைத் தட்டி வீட்டில் உள்ளதை தூக்கி கொண்டு சென்று விடப் போகிறார்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டியில் மனு வாங்கினார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் பெட்டியில் உள்ள மனுக்களை எடுத்து தீர்வு காண்பேன் என தொவித்தார். இப்படி கூறிவிட்டு எதற்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவங்கி மக்களை ஏமாற்றுகிறார் ஒருவரை ஏமாற்ற வேண்டும்மென்றால் ரின் சதுரங்க வேட்டையில் வரும் வசனத்தைப்போன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட நகலை காண்பித்து ஸ்டாலின் ஆசையை தூண்டுகிறார்.  மக்கள் ஏமாற வேண்டாம்.  ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன்வாங்கியுள்ளார். திமுக ஆட்சி முடிந்தவுடன் 5லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன்வாங்கியிருப்பீர்கள், நீங்களா பொருளாதாரத்தை உயர்த்த போகிறிர்கள். பிறக்கும் குழந்தை ஒன்றரை லட்சம் கடனாளியாகிவிடுகிறது. திமுக ஆட்சியில் மளிகை பொருட்கள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாதவராக முதலமைச்சர் உள்ளார் என்றார்.
Next Story