அதிமுக கூட்டத்தில் உற்சாக நடனம்
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், சீர்காழி, ஆக்கூர் முக்கூட்டு செம்பனார்கோவில், மயிலாடுதுறையில் வாகனத்தில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தும், பரப்புரை செய்தும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக அரசுக்கு எதிராக பரப்புரை செய்தார். இந்நிகழ்ச்சியின் முன்னதாக பெண்கள் இருவர் மேடையில் பாடிய பாடல் ஒன்றிற்கு நடனமாடினர். மூதாட்டி ஒருவர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நடனம் ஆடியபோது பெண்கள் சுற்றி நின்று உற்சாகப்படுத்த இருவரும் போட்டி போட்டு நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.
Next Story




