ஜப்பான் மொழி தமிழ் மொழி உறவை பலப்படுத்தும் ஆன்மீக பயணம்

ஜப்பான் மொழி தமிழ் மொழி உறவை பலப்படுத்தும் ஆன்மீக பயணம்
X
தமிழர்களை வரவேற்கும் ஜப்பான் மக்கள்   தமிழ் ஜப்பான்மொழி ஒற்றுமையை கண்டு வியக்கின்றனர் மயிலாடுதுறை தருமபுரம் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் 80 ஜப்பானியர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி சார்பில் தமிழர் கலை மற்றும் பண்பாடு என்ற தலைப்பில்    ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் 5 அமர்வுகளாக நடைபெற்ற   கருத்தரங்கத்தில், ஜப்பான் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி தலைமையில் ஜப்பானியர்கள் 80 பேர் தமிழகத்தின் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.     நிறைவு விழாவில், தருமபுரம் ஆதீனம் கலந்துகொண்டு,  ஜப்பானியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.    அவர் பேசுகையில், உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கும் நிலையில், ஜப்பான் மொழிக்கு தாய்மொழியாக அவர்கள் தமிழ்மொழியை கூறுவது பாராட்டுக்குரியது என்றார்.     ஜப்பான் கல்லூரி பேராசிரியர் கோபால்சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில, 40 ஆண்டுகாலம் ஜப்பானில் பேராசிரியராகப் பணியாற்றினேன், ஜப்பான்மொழியும் தமிழ்மொழியும் இலக்கணத்திலும், மொழியிலும், , வாழ்வியலிலும் சரி ஒத்ததாக இருக்கிறது என்பதை நான் எனது 1.5 லட்சம் மாணவர்களுக்கும் விளக்கியுள்ளேன்,  கலாச்சாரமிக்க தமிழ்நாட்டைக் காணவும், கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளவும், இங்கே சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம், தமிழக மக்கள் ஜப்பானுக்கு வரவேண்டும் என ஜப்பானியர்கள் விரும்புகின்றனர் என்றார்.
Next Story