தேர்தல் ஆணையத்தை கண்டித்து சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்

X
வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பீகாரில் எதிர்கட்சியினர், சிறுபான்மையினர் 65 லட்சம் பெயர்களை நீக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story

