திருக்கடையூர் ஆலயத்தில் டாக்டர் ராமதாஸ் மனைவி சரஸ்வதி அம்மாள்

திருக்கடையூர் ஆலயத்தில் டாக்டர் ராமதாஸ் மனைவி சரஸ்வதி அம்மாள்
X
திருக்கடையூர் கோவிலில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனைவி சரஸ்வதி மற்றும் மகள் சாமி தரிசனம் ஜி கே மணி உடன் இருந்தார். 
தமிழக அரசியலில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைகளும் நாளுக்கு நாள் உத்வேகம் எடுத்து வருகிறது இந்நிலையில் பாமக நிலைபாடு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி வருகின்றனர் நேற்று பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் பூம்புகாரில் பாமக சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று மாலையில் ராமதாஸ் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மனைவி சரஸ்வதி மற்றும் மகள் ஆகியோர் கோவிலுக்கு வந்து கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர் அவர்களுடன் பாமக ஜி கே மணி மற்றும் சில நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.
Next Story