தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில்சிறார்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 700 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) குமாரவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட 700 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் இருந்து ஆதீனத்தின் வீதிகளில் பேரணியாக பதாகை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு சுற்றி வந்தனர்.
Next Story