மயிலாடுதுறையில் குறுவட்ட அளவிலான போட்டி கள்

மயிலாடுதுறையில் குறுவட்ட அளவிலான போட்டி கள்
X
மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்:- ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 470 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்
மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள 40 பள்ளிகளை சேர்ந்த 470 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர். வட்ட அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி பெறுவர்.
Next Story