மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

X
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 93,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 130 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிராஜபுரம் ஊராட்சியில் விவசாயிகள் நலனுக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் விவசாயிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பணியினை துவக்கி வைத்தார். இதன் மூலம் கோனேரிராஜபுரம் ஊராட்சியை சுற்றியுள்ள வைகல், நத்தம், பருத்திக்குடி உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெறுகின்றனர். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜா, இமயநாதன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

