கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.

X
Karur King 24x7 |14 Nov 2025 6:14 PM ISTகரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.
கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம். கரூரை அடுத்த தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் வித்யா முன்னிலை வகித்து விழாவை சிறப்பாக கொண்டாடினர். பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் திரளாக கலந்து கொண்டு குழந்தைகள் தின விழாவை சிறப்பித்தனர்.
Next Story
