கரூர்-தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பதக்கங்களை வென்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு.

கரூர்-தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பதக்கங்களை வென்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு.
X
கரூர்-தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பதக்கங்களை வென்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு.
கரூர்-தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பதக்கங்களை வென்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு. கரூரை அடுத்த தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ சபரி கிரிசன் பள்ளி கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான ஜூலோ போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த மாணவன் தேசிய அளவில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிலம்பம் போட்டியில் இதே பள்ளியைச் சேர்ந்த எஸ் விக்னேஷ் என்ற மாணவன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் எஸ் பிரணாவ் ஸ்ரீ அருள்நந்தன், என். சுதர்சினி ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர். இன்று அவர்களுக்கு பாராட்டு கூட்டம் பள்ளி வளாகத்தில் பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பள்ளித் தாளாளர் பேங்க் சுப்பிரமணயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு அரசு வழங்கிய சான்றிதழை கொடுத்து பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியர் சக்திவேல் திலகவதி, பரமேஸ்வரி, கார்த்திகாயினி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
Next Story