கரூர் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் முடிவை மாற்று வழியில் செய்ய வலியுறுத்தி டாஸ்மார்க் மேலாளரிடம் மனு .

கரூர் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் முடிவை மாற்று வழியில் செய்ய வலியுறுத்தி டாஸ்மார்க் மேலாளரிடம் மனு .
கரூர் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் முடிவை மாற்று வழியில் செய்ய வலியுறுத்தி டாஸ்மார்க் மேலாளரிடம் மனு . கரூரை அடுத்த பசுபதிபாளையம் பகுதியில் செயல்படும் தொழில் பேட்டையில் டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று மாவட்ட டாஸ்மார்க் மேலாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிஐடியு ,டாஸ்மார்க் விற்பனை சங்கம், அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர்கள் விடுதலை முன்னணி, அரசு பணியாளர்கள் சங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் விஜய சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அரசு அண்மையில் அறிவித்த காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் செயல்பாட்டினை டாஸ்மார்க் ஊழியர்களை கொண்டு செயல்படுத்தும் முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்த திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளதால் இந்த காலி மது பாட்டில்களை பெறுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம்,இது நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டிய அவசியம் கருதி தமிழக முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை ஏற்படுத்த நாளை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story