கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த தாமரை ஏரியை மத்திய குழு ஆய்வு
Ponneri King 24x7 |27 Nov 2025 11:04 AM ISTசிப்காட் தொழிற்சாலை மற்றும் பல்வேறு கழிவுகள் கலந்து தாமரை ஏரியின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசும் அவல நிலை
கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த தாமரை ஏரியை மத்திய குழு ஆய்வு செய்ததில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏறியானது சிப்காட் தொழிற்சாலை மற்றும் பல்வேறு கழிவுகள் கலந்து ஏரியின் நீரானது முற்றிலுமாக மாசடைந்து துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் விதமாக அமைந்துள்ளது இது குறித்து பொதுமக்கள் பல்வேறு புகார் தெரிவித்தும் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் ஏரியை ஆய்வு செய்தும் ஏரியில் உள்ள கழிவு நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியும் பரிசோதனை மேற்கொண்டும் தற்போது வரை ஏரியை சீரமைக்கும் பணிகள் ஏதும் நடைபெறாமல் உள்ள நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குழு மாநில செயலாளர் குணசேகர் அவர்கள் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஸ்ரீ குபேந்திரன் யாதவ் ஜி அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியின் பிரச்சனைகள் குறித்து அதனை பாதுகாக்க வலியுறுத்தி எழுதிய அவசர கடிதத்தை தொடர்ந்து அவரது அறிவுறுத்தலில் இன்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் உதவி இயக்குனர் பூர்ணிமா மற்றும் அறிவியல் வல்லுநர் சுஷ்மிதா கஜலட்சுமி ஆகியோர் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு கழிவு நீர் மாதிரிகளை சேகரித்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் சுகாதாரப் பாதிப்புகள் தங்கள் உடலில் ஏற்பட்ட தோல் நோய்கள், வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் நகைகளின் நிறமாற்றம் போன்ற பாதிப்புகளை நேரடியாகக் காண்பித்து, ஏரியின் சீரழிவால் தாங்கள் அனுபவிக்கும் சுகாதாரச் சிக்கல்களை விளக்கினர். • நிலத்தடி நீர் மாசு: குடிநீர் ஆதாரமான நிலத்தடி நீரின் மொத்தக் கரைந்த திடப்பொருட்களின் அளவு (TDS) 1602 mg/L ஆக உயர்ந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குடிநீருக்கான நிர்ணயிக்கப்பட்ட வரம்பான $500~mg/L$ ஐ விட மும்மடங்கு அதிகம் என்பது கவலை அளிக்கிறது. • அதிகாரிகள் உறுதி: ஏரியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை அதிகாரபூர்வக் குழுவினர் உறுதி செய்துள்ளனர். கழிவுநீர் மற்றும் இரசாயனக் கலப்பினால் ஏரி நீர் கருப்பாக மாறி, கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. • மாசு நிறுத்து ஆணை: சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-ன் கீழ், SIPCOT பகுதியில் புதிய தொழிற்சாலை விரிவாக்கங்களுக்கு உடனடியாகத் தடை (Moratorium) விதித்தல். • சுத்திகரிப்பு நிலையங்கள் (ETP/STP): அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் Zero Liquid Discharge (ZLD) அமைப்புகளைக் கட்டாயமாக்குதல், மற்றும் நகரக் கழிவுகளுக்குச் சமுதாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STP) அமைத்தல். • 'மாசுபடுத்துபவரே செலுத்த வேண்டும்' கொள்கை: நீர் சட்டம், 1974-ன் கீழ், விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகளின் மீது கடுமையான சுற்றுச்சூழல் இழப்பீட்டை (Environmental Compensation) விதித்து, அந்த நிதியைக் கொண்டு ஏரியை மீட்டெடுத்தல். மத்தியக் குழுவின் ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில், ஏரியைக் காக்க விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தச் சுற்றுச்சூழல் சிக்கலைத் தீர்க்க, மத்திய அரசின் இந்த நேரடித் தலையீடு ஒருதிருப்புமுனையாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது, மனுதாரரான மாநிலச் செயலாளர் மு. குணசேகர், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் எம். பாஸ்கர், மாநிலச் செயலாளர் ஆர்.சி. பாலாஜி, மாவட்டத் தலைவர் எம். சுந்தரம், மாநிலச் செயலாளர் நரேஷ், மண்டலத் தலைவர் சந்திரசேகர், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் பிரிவு மாவட்டத் தலைவர் அஜய்குமார் ,மற்றும் அனைத்து பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story


