பசுபதிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்.

பசுபதிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்.
பசுபதிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதி பாளையம் ரயில்வே குகை வழி பாதை அருகே அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை மங்கள இசை உடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக வேள்வியில் நான்காம் கால யாக பூஜையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானம்,கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேக விழா கமிட்டியினர் யாக வேள்வியில் பூ பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்து கோவிலை வளம் வந்து பிறகு கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்சென்று, கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story