புன்னம் சத்திரம் - முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி துணை முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடிய திமுக நிர்வாகிகள்.

புன்னம் சத்திரம் - முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி துணை முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடிய திமுக நிர்வாகிகள்.
புன்னம் சத்திரம் - முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி துணை முதலமைச்சர் பிறந்த நாளை கொண்டாடிய திமுக நிர்வாகிகள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னன்சத்திரம் பகுதியில் செயல்படும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட செயலாளர் சாவி நல்லுசாமி தலைமையில் இன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வேலுச்சாமி , சத்தியமூர்த்தி , புன்னம் கிளை செயலாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அன்னதானம் வழங்கிய கட்சி நிர்வாகிகளுக்கு முதியோர்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story