கரூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற்றோர்- சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு, தூக்கிட்ட இளைஞர் உயிரிழப்பு

கரூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற்றோர்- சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு, தூக்கிட்ட இளைஞர் உயிரிழப்பு
கரூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற்றோர்- சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு, தூக்கிட்ட இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வேலம்பாடி கிராமத்தை சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவியான 16 வயது சிறுமி ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, இன்று காலை 10.00 மணியளவில் சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற பின்பு,இளைஞர் சிறுமியின் கழுத்தை பிளேடால் அடுத்ததால் மயங்கி கீழே விழுந்தார். சிறுமி இறந்து விட்டதாக நினைத்து வசந்தகுமாரும் சிறுமியின் வீட்டிலேயே தூக்கு மாட்டி இறந்துள்ளார். உயிர் பிழைத்த சிறுமி எழுந்து வந்து அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமி சிகிச்சைக்காக அருகிலுள்ள பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் முத முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உயிரிழந்த வசந்தகுமாரின் பிரேதம் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story