வெள்ளியணையில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வெள்ளியணையில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வெள்ளியணையில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை வேத பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமுறை பாராயணம் மூலமந்திரம் மால மந்திரம் காயத்ரி ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுர த்திற்கு சிவாச்சாரியர்கள் எடுத்துச் சென்று கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனை தொடர்ந்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story