கரூரில் நடைபெற்ற பலிஜவார் நாயுடு மகாஜன சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.

கரூரில் நடைபெற்ற பலிஜவார் நாயுடு மகாஜன சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூரில் நடைபெற்ற பலிஜவார் நாயுடு மகாஜன சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவில் உள்ள கரூர் பலிஜவார் நாயுடு மகா ஜன சங்க அலுவலகத்தில் சங்கத்தின் மகாசபை கூட்டம் சங்கதலைவர் மனோகரன் நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் ஜெயபால் , பொருளாளர் சேதுராமன்,துணைச் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள்,சங்க உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் சங்க துணை தலைவர் ஜெயபால் மறைவிற்கு சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவிப்பது, 2024-25 ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை ஆமோதித்தல், சங்க துணை தலைவர் திரு ஜெயபால் காலமானதை தொடர்ந்து புதிதாக ஜெகநாதன் என்பவரை துணைத் தலைவராக பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் செய்கிறது என்ற மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினர்.
Next Story