கரூர்-டேக் வெண்டோ போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணாக்கர்களுக்கு பாராட்டு.

X
Karur King 24x7 |1 Dec 2025 5:58 PM ISTகரூர்-டேக் வெண்டோ போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணாக்கர்களுக்கு பாராட்டு.
கரூர்-டேக் வெண்டோ போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணாக்கர்களுக்கு பாராட்டு. பள்ளிக்கல்வித்துறை சார்பாக கரூர் மாவட்டம் குளித்தலையில் அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக் வெண்டோ போட்டியில் தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜிபி சோமேஸ்வரன், கே தர்ஷன் இருவரும் மாவட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்கள். இவர்கள் மாநில அளவில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தாமரைச்செல்வன், பி.கிஷாந்த் , பி.ஸ்ரீ சுஜித் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் வென்றனர். T. நரேஷ் கண்ணா 11ஆம் வகுப்பு மாணவன் மூன்றாம் இடத்தில் வென்று வெண்கலப்பதக்கம் வென்றார். இவர்களை பள்ளித் தாளாளர் பேங்க் சுப்பிரமணியன் பாராட்டி கேடயமும் சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயசித்ரா ஆசிரியர்கள் பரிமளா, அனிதா, மோனிகா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
