தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு கரூரில் பள்ளி மாணவ-மாணவியர் நடத்திய விழிப்புணர்வு பேரணி.
Karur King 24x7 |2 Dec 2025 1:47 PM ISTதேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு கரூரில் பள்ளி மாணவ-மாணவியர் நடத்திய விழிப்புணர்வு பேரணி.
தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு கரூரில் பள்ளி மாணவ-மாணவியர் நடத்திய விழிப்புணர்வு பேரணி. கரூர்-ஈரோடு சாலையில் செயல்படும் பப்ளிக் ஸ்கூல் பள்ளி சார்பாக தேசிய மாசுக்கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் துவங்கி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளியின் முதல்வர் பிரியதர்ஷினி கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். நடைபெற்ற இந்த பேரணி கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக, மாசு கட்டுப்பாடு குறித்தும், மாசு ஏற்படாமல் தவிர்ப்பது குறித்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஆறுமுகம் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.
Next Story






