கொசஸ்தலை ஆற்றுக்குச்செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறிய சோழவரம் ஏரி நீரானது நெற்பயிர்களுக்குள் பாய்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

மழையில் மூழ்கிய நெல் விளை நிலங்கள்
Ponneri King 24x7 |2 Dec 2025 10:42 PM ISTசோழவரம் ஏரி நீர் வெளியேற்றும் கால்வாயை பொதுப்பணி துறையினர் முறையாக சீரமைக்காததால் 250கன அடி உபரி நீரானது வெளியேற்றப்பட்டு கொசஸ்தலை ஆறுக்குச்செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறிய சோழவரம் ஏரி நீரானது பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய பயிரிட்ட விளைநிலங்களில் பாய்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
சோழவரம் ஏரி உபரி நீர் வெளியேற்றும் கால்வாயை முறையாக பொதுப்பணித்துறையினர் சீரமைக்காததால் 250 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு கொசஸ்தலை ஆற்றுக்குச் செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறிய சோழவரம் ஏரி நீர் நெற் பயிர்களுக்குள் பாய்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விலை நிலங்கள் சோழவரம் மினி ஏரியாக மாறியது. தைத்திருநாள்பொங்கல் பண்டிகை அறுவடை செய்ய பயிரிட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கின. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் செங்குன்றம் சுற்று வட்டாரங்களில் பரவலாக இன்று அதிக கன மழை பெய்து வருகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு அறிவித்த ரெட் அலெர்ட்டை வாபஸ் பெற்று ஆரஞ்சு அலெர்ட் டாக அறிவித்த நிலையில் காலையில் லேசாக தூரி வந்த மழை வேகம் எடுத்து புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழையாக கொட்டி தீர்த்தது அலமாதி பம்மதுகுளம் சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் புழல் ஏரிக்கு நீர் வரத்து சுமார் 2500 கன அடியாக அதிகரித்து 21. 20 அடி உயரம் கொண்ட புழல் ஏறி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது இதனால் உபரி நீரை பொதுப்பணித்துறையினர் மதகின் இரண்டில் வினாடிக்கு 100 கன அடி வீதம் திறந்து வெளியேற்றினர் மேலும் உபநீர் செல்லக்கூடிய சாமியார் மடம் தண்டல் காலனி கிராண்ட் லைன் கோசாப்பூர் ஆம் முல்லைவாயல் மணலி புதுநகர் சாத்தாங்காடு சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ளபய எச்சரிக்கையும் பிடித்திருந்தனர் இதனுடைய சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கிய ஏரியான சோழவரம் எரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் வரப்பெற்ற அதிகப்படியான நீர் வரத்தால் வேகமாக நிரம்பியது ஏற்கனவே சோழவரம் ஏரியில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் கரைகள் பலவீனமாக இருந்தது இதனை அடுத்து உபரி நீர் வெளியேற்றும் மதகை பயன்படுத்தி பொதுப்பணி துறையினர் வினாடிக்கு 250 கன அடி நீரை வெளியேற்றி வருகின்றனர் இந்த நீரானது கொசஸ் த்தலை ஆற்றிற்கு சென்றடைந்து கடலுக்குச் செல்கிறது முறையாக உபரி நீர் செல்லக்கூடிய கால்வாயை பொதுப்பணி துறையினர் சீரமைக்காமல் அப்படியே திறந்து விட்டதால் உடைத்து தண்ணீர் தேவனேரி கிராமத்தை சூழ்ந்தது கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களை சூழ்ந்தது இதனால் கடன் வாங்கி பொங்கல் அறுவடை க்காக பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் தொடர்ந்து உபரி நீர்சோழவரம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் நெற்பயிர் அழுகி வீணாகிவிடும் என வேதனை அடைந்துள்ளனர்
Next Story


