செங்குன்றம் பால வாயல் குமரன் நகர் சன் கார்டன் பகுதியில் இருந்து நான்கு பேர் மீட்பு

வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் வெளியில் வர முடியாமல் அவதி. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் அப்பகுதி மக்களை மீட்டு முகாமில் தங்க வைத்தனர்
திருவள்ளூர் செங்குன்றம் பால வாயல் குமரன் நகர் சன் கார்டன் பகுதியில் இருந்து நான்கு பேர் மீட்பு சென்னை செங்குன்றம் அடுத்த நியூ சன் கார்டன் இரண்டாவது பிரதான சாலை பால வாயல் பகுதியில் வீட்டில் மழை நீர் புகுந்ததால் வெளியில் வர முடியாமல் அவதி உள்ளாய் இருந்தனர் இதனை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த பச்சையப்பன் செல்வராஜ் லட்சுமி மோனிஷ் ஆகிய நான்கு பேரை மீட்டு பத்திரமாக நிவாரண முகாமில் தங்க வைத்தனர் அதே போன்று குமரன் நகர் மூன்றாவது பிரதான சாலையில் இருந்த நந்தகுமார் முத்துக்குமரன் மணிகண்டன் லக்ஷ்மிபதி கலைவாணன் ஆகிய ஐந்து பேரையும் செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.
Next Story