கரூர் -அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்க வந்த முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.
Karur King 24x7 |3 Dec 2025 5:53 PM ISTகரூர் -அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்க வந்த முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு.
கரூர் -அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்க வந்த முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு. அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதியில் உள்ள கோடங்கிபட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட பேரூர் வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே தனது தேர்தல் பரப்புரையை துவங்கிய நிகழ்வு வாக்காளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story




