கரூர்-தமிழக அரசின் டாஸ்மாக் காலி மது பாட்டில்களை ஊழியர்கள் திரும்ப பெற வலியுறுத்தும் முடிவை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Karur King 24x7 |5 Dec 2025 4:20 PM ISTகரூர்-தமிழக அரசின் டாஸ்மாக் காலி மது பாட்டில்களை ஊழியர்கள் திரும்ப பெற வலியுறுத்தும் முடிவை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர்-தமிழக அரசின் டாஸ்மாக் காலி மது பாட்டில்களை ஊழியர்கள் திரும்ப பெற வலியுறுத்தும் முடிவை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக அரசின் டாஸ்மாக் காலி மது பாட்டில்களை ஊழியர்கள் திரும்ப பெற வலியுறுத்தும் முடிவை கண்டித்து தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு மாவட்ட இணை செயலாளர் சரவணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,மாவட்ட தலைவர் ராஜா முஹமது, எல்பி எப் மாவட்ட செயலாளர் சுடர் வளவன் உள்ளிட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் மட்டும் தொழிற்சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்கனவே பணிச்சுமையில் உள்ள டாஸ்மாக் ஊழியர்களை மீண்டும் காலி மது பாட்டில்களை பெறுவதற்கு வற்புறுத்தக்கூடாது எனவும், அரசு ஒப்பந்ததாரர் மூலம் காலி மது பாட்டில்களை பெறுவதாக கூறிய போதும்,காலி மது பாட்டில்களை பெறுவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியருக்கு ஊதியம் டாஸ்மார்க் ஊழியர்களை வழங்க சொல்வதைக் கண்டித்தும், இந்த நடைமுறை ஏற்பட்டு நான்கைந்து நாட்கள் ஆகியும் பெறப்பட்ட காலி மது பாட்டில்களை ஒப்பந்ததாரர் திரும்ப பெற மறுப்பதும், இதனால் டாஸ்மார்க் பார்களில் நிறைந்து கிடக்கும் காலி மது பாட்டில்களால் தொடர்ந்து களப்பணி செய்ய முடியாமல் தவிக்கும் சூழல் இருப்பதை கண்டித்தும், காலி மது பாட்டில்களை திரும்பபெரும் முடிவில் அதற்காக தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story




