கரூரில்,மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூரில்,மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
கரூரில்,மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு, வக்ஃபு சட்டத் திருத்தம் போன்ற மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் பாஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் அஜிஸ் பள்ளப்பட்டி நகர இணை செயலாளர் காஜா முகைதீன், பொறியாளர் அணி மாநில செயலாளர் சதாம் உசேன், மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, கரூர் நகர தலைவர் நூர் முகமது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மஜீத்களின் மீதான ஆர் எஸ் எஸ் உரிமை கோரலை அனுமதிக்காதே. பாபரியும் கியான் வாபியும் சாகே ஈத்கா மஸ்ஜிதும் மதசார்பின்மையின் அடையாளங்கள் எனவும், ஆர் எஸ் எஸ்-ம் பாஜகவும் இணைந்து மதவெறி அரசியல் செய்வதை கண்டித்தும். வக்ஃபு சொத்துக்களை அபகரிக்கும் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் வெறுப்பு அரசியலை புறக்கணிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.
Next Story