கரூரை மையப்படுத்தி முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவையை வழங்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு

கரூரை மையப்படுத்தி முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவையை வழங்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு
கரூரை மையப்படுத்தி முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவையை வழங்க மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலின் படி, நேற்று புது தில்லியில் மத்திய இணை அமைச்சர் Dr.L. முருகன், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து, கரூர் மாவட்ட மக்களின் கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து மனுக்களை நேரில் வழங்கி, உடனடியாக நிறைவேற்றித் தர கோரினார். அந்த மனுவில், 1.மதுரை, கரூர், சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை, கரூர், திருச்சி வழியாக சென்னைக்கு புதியதாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டிய வேண்டியும் 2.வண்டி எண் - 20671 மதுரை to பெங்களூர், மறுமார்க்கம் வண்டி எண் - 20672 பெங்களூர் to மதுரை வந்தே பாரத் வண்டியானது மதுரை, திண்டுக்கல், திருச்சி,கரூர், சேலம், பெங்களூர் சென்று வருகிறது. இதனை மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூர் இயக்க வேண்டியும் மறுமார்க்கம் பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை செல்லவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், 3.வண்டி எண் : 22153 சென்னை - சேலம், வண்டி எண் : 22154 சேலம் - சென்னை மேற்கண்ட இரயில் கரூர் வரை நீட்டிப்பு அறிவிப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது. இதனை கரூர் வரை நீட்டிப்பு செய்து தரவும் 4.வண்டி எண் - 20601, மறுமார்க்கம் வண்டி எண் - 20602 சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ், கரூர் இரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினசரி வண்டியாக இயக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story