அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொன்னேரி தொகுதியில் அறுசுவை உணவு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
Ponneri King 24x7 |9 Dec 2025 4:48 PM ISTஅன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அறுசுவை உணவு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அறுசுவை உணவு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான துரை சந்திரசேகர் தலைமையில் பட்ட மந்திரி பகுதியில் வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் ஏற்பாட்டில் அறுசுவை உணவு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர் இதில் மாவட்டத் துணைத் தலைவர் வல்லூர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர் அதேபோன்று தச்சூர் பகுதியில் வட்டாரத் தலைவர் ஆமூர் சந்திரன் சோழவரம் வட்டார தலைவர் மணிகண்டன் ஏற்பாட்டில் அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தனர் இதில் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சம்பத் பழவேற்காடு ஜெயசீலன் எம் ஆர் கே பாலாஜி வழக்கறிஞர் அனிதா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.
Next Story


