கர்மவீரர் காமராஜரை அவமதித்த முக்தார் அகமதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்மவீரர் காமராஜரை அவமதித்த முக்தார் அகமதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
கர்மவீரர் காமராஜரை அவமதித்த முக்தார் அகமதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் youtube சேனல் நடத்தி வரும் முக்தார் அகமது அண்மைக்காலத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அவமதித்து கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், கரூரில் நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அமைப்பின் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இதுதான் அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அகஸ்டின் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அவமதிக்கும் வகையில் முட்டாள் தனமாக கருத்துக்களை பதிவிட்ட முக்தார் முகமதுவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலை முடக்கிட வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story