கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகப் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஊடக பிரிவு சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ ஜி ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் ஒன்றிய செயலாளர் வாங்கல் முருகன், மாவட்ட துணை செயலாளர் வேங்கை சுடர்மணி, மாநில இளைஞரணி செயலாளர் சந்தோஷ் குமார்,மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், கரூர் மேற்கு மண்டல பொறுப்பாளர் பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் குமரவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஒன்றிய நகர வட்ட பகுதியில் கட்சிக்கொடி ஏற்றி வைத்தல், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துதல், கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளை இன்னும் ஒரு வார காலத்தில் மாவட்டம் முழுவதும் துவக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story