கரூர்-அரசு கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் தகாத செயலில் ஈடுபட்டதை கண்டித்து மாணாக்கர்கள் திடீர் போராட்டம்.

கரூர்-அரசு கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் தகாத செயலில் ஈடுபட்டதை கண்டித்து மாணாக்கர்கள் திடீர் போராட்டம்.
கரூர்-அரசு கல்லூரி மாணவியிடம் பேராசிரியர் தகாத செயலில் ஈடுபட்டதை கண்டித்து மாணாக்கர்கள் திடீர் போராட்டம். கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் தன்னாட்சி அந்தஸ்து கொண்ட அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஜாகிர் உசேன் கல்லூரியில் நியூட்ரிஷியன் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாட்டனி பாடப்பிரிவில் பயிலும் மாணவியிடம் பேராசிரியர் ஜாகிர் உசேன் தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியும் உடன் பயிலும் மாணக்கர்களும் கல்லூரியில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று மதியம் திடீரென கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையிலான குழுவினரும்,SFI எனப்படும் ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சூர்யா தலைமையிலான குழுவினரும் போராட்டக் களத்திற்கு வந்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணாக்கர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும். தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட பேராசிரியரை கைது செய்ய வேண்டும். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் வட்டாட்சியரிடம் மாணாக்கர்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணாக்கர்கள் போராட்டத்தை கைவிட்டு கலை கலைந்து சென்றனர்.
Next Story