கரூரில் மத்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

Karur King 24x7 |14 Dec 2025 4:07 PM ISTகரூரில் மத்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.
கரூரில் மத்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு. மை பாரத் எனப்படும் மத்திய அரசின் இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தை சேர்ந்த 15 முதல் 29 வயது உடைய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்ற வாலிபால், கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம், சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா மாவட்ட இளையோர் அலுவலக அலுவலக அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மை பாரத் ஆலோசனை குழு உறுப்பினர் வெங்கடாசலம் கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் கணேசன், தேசிய இளைஞர் தன்னார்வலர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
