விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்-அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னதுரை கரூரில் பேட்டி.

விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்-அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னதுரை கரூரில் பேட்டி.
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்-அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னதுரை கரூரில் பேட்டி. கரூர் சு சுங்க கேட் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், பொருளாளர் பழனிசாமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னத்துரை நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநில அரசு ஏழை எளிய மக்களுக்கு வட்டி இல்லாத கடனை நிபந்தனை இல்லாமல் 3- லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குடிமனை பட்டாவிற்காக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நீர்நிலைகள், மேய்ச்சல், புறம்போக்கு, கல்லாங்குத்து புறம்போக்கு, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களை நீதிமன்றங்கள் சொல்கிற அடிப்படையில் இடிப்பதற்கு முயற்சி செய்வதை கைவிட வேண்டும். இதற்கு ஒன் டைம் ஸ்கீம் மூலமாக அனைவருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகள் குறைந்தபட்ச கூலி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஏழை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ச்சியாக போராடுவோம் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார்.
Next Story