கரூர் பரணி கல்விக் குழுமத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு ஜப்பானிய துணைத் தூதர் பாராட்டு.

கரூர் பரணி கல்விக் குழுமத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு ஜப்பானிய துணைத் தூதர் பாராட்டு.
கரூர் பரணி கல்விக் குழுமத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு ஜப்பானிய துணைத் தூதர் பாராட்டு. கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் ‘உயர்கல்வி மற்றும் அயல்நாட்டுத் தொடர்பு மையம் சார்பில், ஜப்பானிய கலாச்சார பரிமாற்ற விழா பள்ளி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் பரணி கல்விக் குழுமத்தின் சர்வதே செயல்பாடுகளுக்கு ஜப்பானிய துணைத் தூதர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பரணி பார்க் கல்வி கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். ஶ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் அசோக் சங்கர், பள்ளியின் செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜூலை 2025-ல் நடைபெற்ற ஜப்பானிய அரசின் மொழித் தேர்வில் பரணி மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர். இதில் பரணி மாணவர்கள் இலக்கணம் மற்றும் வாசித்தல் பிரிவுகளில் 120/120 மதிப்பெண்களும், கேட்டல் பிரிவில் 60/60 முழு மதிப்பெண்களும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். மேலும் தற்போது பரணி மாணவர்கள் 150 பேர் ஜப்பானிய அரசின் மொழித் தேர்வுக்காக ஶ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக ஜப்பானிய ஒலிம்பிக் விளையாட்டான ஜூடோ போட்டிகளில் தென்னிந்திய அளவில் தொடர்ந்து ‘ஒட்டுமொத்த சாம்பியன்’ பட்டத்தை வென்று சாதனை படைத்து வருகின்றனர். ஜப்பானில் உள்ள நூறு ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நிப்பான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச கல்விப் பரிமாற்றத் திட்டங்கள் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜப்பானிய துணைத் தூதர் மியாட்டா கென்ஜி அவர்கள் பேசுகையில் நூற்றுக்கணக்கான பரணி கல்விக் குழும மாணவர்களின் ஆர்வத்துடன் ஐப்பானிய அரசின் மொழித் தேர்வுக்குத் தயாராகி வருவதையும், அவர்களின் அபாரமான ஜப்பானிய மொழித் திறனையும், ஜப்பானில் தோன்றிய ஜூடோ விளையாட்டில் அவர்களின் பல்லாண்டுகள் தொடர் சாதனைகளையும் கண்டு வியந்து வெகுவாகப் பாராட்டினார். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி. ராமசுப்பிரமணியன் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர், ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் அஸ்மத் பாத்திமா,செல்வி, புவனா, கிரிஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர். நிறைவாக அறக்கட்டளை உறுப்பினரும் ஶ்ரீ சங்கரா ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் செயலருமான சுபாஷினி நன்றியுரை வழங்கினார்.
Next Story