கரூர்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
Karur King 24x7 |19 Dec 2025 5:19 PM ISTகரூர்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
கரூர்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு பிறகு கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய நான்கு தொகுதியிலும் உள்ள மொத்த வாக்காளர்கள் ஆண் 3,94,044 பேரும் பெண் வாக்காளர்கள் 4,24,546 பேரும் இதர 82 பேரும் என மொத்தம் 8,18,672 உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்னர் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளும் இருந்த வாக்காளர் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் 4,30,518 பேரும் பெண் வாக்காளர்கள் 4,67,753 பேரும் இதர்ர் 91 பேர் என மொத்தம் 8,98,362 பேர் இருந்தனர். இவர்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 79,690 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று முதல் 18.01.2026 வரை பெயர்களைச் சேர்க்க (படிவம் 6 ), நீக்க (படிவம் 7), முகவரி மாற்றம் திருத்தங்கள் மற்றும் மாற்று புதிய அடையாள அட்டை பெற்றிடவும் (படிவம் 8) மனு செய்து கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கி உள்ளது, இப்படிவத்துடன் உறுதிமொழி படிவம் மற்றும் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து அளிக்க வேண்டும் பெறப்பட்ட படிப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17.02.2026 ஆம் அன்று வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், உதவி ஆணையர் கலால் முருகேசன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், மாநகராட்சி ஆணையர் சுதா, தேர்தல் வட்டாட்சியர் தனசேகரன் உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story




