தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கரூரில் காத்திருப்பு போராட்டம். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 2-வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மாவட்ட செயலாளர் தேவி தலைமையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை போல அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும், செவிலியர்களுக்கு 7, 14, 20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Next Story