கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை பாதுகாக்க கோரியும், குடியிருப்புகளில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X
Ponneri King 24x7 |22 Dec 2025 2:57 PM ISTரசாயன கழிவுகள் ஏரியில் விடப்படுவதால் ஏரி நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தியும், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் ஊர்திகள் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீரை பொது இடங்களில் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாமரை பெரிய ஏரியில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாசனத்திற்காகவும், தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர், இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஏரியில் விடப்படுவதால் ஏரி நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தியும், குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் ஊர்திகள் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீரை பொது இடங்களில் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கழிவு நீர் ஊர்தி உரிமையாளர்கள் கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவினை சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் வரை கல்வி நீரை வெளியேற்ற தங்களுக்கு அரசு தற்காலிக மாற்றிய இடம் ஒதுக்க கோரி ஒரு மாத காலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மலக்கழிவுகளும் கழிவு நீரும் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் அலட்சியம் காட்டி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கண்டித்தும், தாமரை ஏரியை உடனடியாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது குடியிருப்புகளில் ஒரு மாத காலமாக கழிவு நீர் அகற்றப்படாமல் தேங்கி நிற்பதால் ஏற்படும் சுகாதார சீர்கெட்டை தடுக்க உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story
