சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வினா- விடை புத்தகங்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வினா- விடை புத்தகங்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வினா- விடை புத்தகங்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் அரசு பொது தேர்வை எதிர் கொள்வதற்காக கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வினா விடை புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வினா விடை புத்தகங்களில் உள்ள வினா விடைகளை மனப்பாடம் செய்வதன் மூலம் கூடுதல் மதிப்பெண்கள் மாணாக்கர்கள் பெற்று வருகிறார்கள். இதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மானாக்கர்களுக்கு வினா விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, சின்ன சேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலிங்கம், பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரசு தேர்வை எளிதில் வெற்றி கொள்வதற்காக மாணாக்கர்களுக்கு வினா விடை புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. வினா விடை புத்தகங்களை பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் எம்எல்ஏவுக்கும் செந்தில் பாலாஜி அறக்கட்டளைக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story