மணவாசி-விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு கருப்பு வில்லைகள் பொருத்தும் பணி நடைபெற்றது
Karur King 24x7 |22 Dec 2025 5:44 PM ISTமணவாசி-விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு கருப்பு வில்லைகள் பொருத்தும் பணி நடைபெற்றது
மணவாசி-விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு கருப்பு வில்லைகள் பொருத்தும் பணி நடைபெற்றது. கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் டோல் பிளாசா செயல்படுத்தி வருகிறது. நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களுக்கு இங்கு சுங்கம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் சாலைகளை கடந்து செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் மோட்டார் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் பெரும்பாலும் வாகன ஓட்டிகள் பொருத்துவதில்லை. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் பயணம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்று மணவாசி டோல் பிளாசாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது ட்டோல் பிளாசாவை கடந்து செல்லும் இருசக்கர மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களை பொருத்தினர். அதேபோல நான்கு சக்கர கார் மற்றும் கனரக வாகனங்களில் ஒளிரும் பட்டைகளை பொருத்தி வாகனங்கள் பாதுகாப்பாக செல்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் சிக்காமல் இருக்கவும், விபத்துக்களை ஏற்படுத்தாமல் இருக்கவும் வாகன ஓட்டிகள் போதிய ஒத்துழைப்பை வழங்கினர்.
Next Story




