பொன்னேரி நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் சாலை அமைக்கவும் பூங்காவை திறக்க கோரி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் சாலை அமைக்கவும் பூங்காவை திறக்க கோரி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
X
பொன்னேரி நகராட்சியில் 30க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் புதிய பூங்காக்கள் உரிய முறையில் திறக்கப்படவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்
பொன்னேரி நகராட்சிக்கு பொது நிதி போதிய அளவில் இல்லை பணிகள் செய்ய முடியவில்லை நகராட்சி ஆணையர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் தனலட்சுமி முன்னிலையில் இன்று நடைபெற்றது பொன்னேரி நகராட்சியில் 30க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் புதிய பூங்காக்கள் உரிய முறையில் திறக்கப்படவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர் மேலும் மழைநீர் கால்வாயினை உரிய முறையில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மழைக்காலங்களில் கடும் சிரமம் அடைவதாகவும் வேதனை தெரிவித்தனர் நகராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பேசுவதற்கு 11 லட்சம் ரூபாய் மதிப்பில் மைக் செட் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு பொது நிதி போதிய அளவில் இல்லை என்றும் அதனால்தான் பணிகளை செய்ய முடியவில்லை என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்
Next Story