கரூரில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு.
Karur King 24x7 |26 Dec 2025 10:20 PM ISTகரூரில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு.
கரூரில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு. கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாணசுபதீஸ்வரர் ஆலயம் அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்கம். சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று ஐயப்பன் கோவில் வளாகத்தில் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஸ்ரீ அஸ்திர ஹோமம் நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஏகாதின லட்சாசனை ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story







