கரூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்குபணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

கரூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்குபணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.
கரூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்குபணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. கரூரை அடுத்த தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் அரசு கலைக்கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பல்வேறு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கல்லூரியின் முதல்வர் மற்றும் இரு பால் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 419 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய செந்தில் பாலாஜி கடந்த நான்கரை ஆண்டுகளில் கரூர் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ரூபாய் சுமார் 4,500- கோடி ரூபாய் தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
Next Story