கரூரில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குருபூஜை விழா.

கரூரில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குருபூஜை விழா.
கரூரில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குருபூஜை விழா. தேமுதிக நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை தமிழக முழுவதும் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழாவை தேமுதிக கட்சியினர் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கரூரில் தேமுதிக கட்சி சார்பில் குருபூஜை விழா கரூரை அடுத்த தாந்தோணி மலை பகுதியில் கட்சியின் கரூர் தெற்கு நகர செயலாளர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் தர்மராஜ், துணைச் செயலாளர்கள் மணிவாசகம், கார்த்திக் மற்றும் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்தை அலங்கரித்து மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி தங்கள் இதயத்தில் இடம் பிடித்த தலைவருக்கு இதய அஞ்சலியை செலுத்தினர். இதே போல அருகில் உள்ள பொன் நகர், ராயனூர், அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளிலும் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
Next Story