கரூரில், சிறுவர் சிறுமியர் மற்றும் பொதுமக்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய காவல்துறையினர்.

கரூரில், சிறுவர் சிறுமியர் மற்றும் பொதுமக்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய காவல்துறையினர்.
கரூரில், சிறுவர் சிறுமியர் மற்றும் பொதுமக்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய காவல்துறையினர். 2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 ஆம் ஆண்டு நள்ளிரவு துவங்கியதை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தாண்டு எது சிறப்பாக வரவேற்று கொண்டாடினர். இதே போல இந்தியாவிலும் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டியது. இதே போல கரூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவு 2026-ஆம் ஆணடு நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடித்து பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்து புத்தாண்டை கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து கரூர் ஏ.டி.எஸ். பி பிரபாகரன் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரரவுண்டானா அருகில் இருபால் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கேக் வெட்டுவதற்கு சிறுவர் சிறுமிகளை வரவழைத்து கேக் வெட்டி சிறுவர், சிறுமியருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை கடந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் கேக்குகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கேக்குகளைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்ததோடு புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
Next Story