கரூர் அருகே நொய்யல் குறுக்கு சாலையில் தமிழக நீதிக்கட்சி அலுவலக திறப்பு விழா.

கரூர் அருகே நொய்யல் குறுக்கு சாலையில் தமிழக நீதிக்கட்சி அலுவலக திறப்பு விழா.
கரூர் அருகே நொய்யல் குறுக்கு சாலையில் தமிழக நீதிக்கட்சி அலுவலக திறப்பு விழா. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களை தயார் படுத்தும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்ட கட்சிகளும் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றனர். இவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக அந்தந்த பிராந்தியத்தில் உள்ள சமூக மற்றும் ஜாதிய சங்க கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக தயாராகி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொய்யல் குறுக்கு சாலையில் தமிழக நீதி கட்சி அலுவலக திறப்பு விழா இன்று கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருக்கு கட்சியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கும்,தொண்டர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கர், மாநில பொருளாளர் சசி, தொகுதி பொறுப்பாளர் கலைச்செல்வன் கமலேஷ்,ஒன்றிய பொறுப்பாளர்கள் ஹரிஹரன், பார்த்திபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கட்சி அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story